உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி, பள்ளியில் உலக யோகா தினம்

கல்லுாரி, பள்ளியில் உலக யோகா தினம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் உலக யோகா தினம் நடைபெற்றது. தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார்.செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி மற்றும் சிறப்பு விருந்தினர் ராஜயோகா ஆசிரியர் ஸ்ரீ தமிழ் ஆகியோர் யோகாசனம் செய்வதின் அவசியம் குறித்து பேசினர். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகப் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.தலைமையாசிரியர் ஞானலெட் சொர்ணகுமாரி தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் அருண் அற்புதராஜ் யோகாவின் அவசியம் குறித்து பேசினார்.பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஏம்ஸ் அமிர்தராஜ் நன்றி கூறினார். ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.பள்ளி தலைமையாசிரியர் கணேசபாண்டி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.*முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் பத்துக்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்தனர். ஆசிரியர்கள் யோகாசனத்தின் நன்மை குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாட்டை உடற்கல்வி ஆசிரியர் முருகானந்தம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை