மேலும் செய்திகள்
வாராஹி அம்மன் கோவிலில் கருட பஞ்சமி வழிபாடு
30-Jul-2025
ராமநாதபுரம்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, புதுமண தம்பதிகள் அம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர். நேற்று ஆடிப்பெருக்கையொட்டிராமநாத புரம் வெளிபட்டணம் சவுபாக்கிய நாயகி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் உள்ள அரச மரத்தடியில் சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி தேங்காய், பழங்கள், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, கருகமணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து நேற்று வழிபட்டனர். புதுமண தம்பதிகள் புதிய மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். பெண்கள் தங்கள் திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்திற்கு மஞ்சள் குங்குமம் பூசி மஞ்சள் கயிறு கட்டி சுற்றிவந்து வழிபாடு செய்தனர்.
30-Jul-2025