உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஸ்ரீ சக்கர சுவாமிக்கு பூஜை

ஸ்ரீ சக்கர சுவாமிக்கு பூஜை

ராமேஸ்வரம்: நவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்பு கட்டப்பட்டு துவங்கியது. முதல் நாளான நேற்று கோயிலில் அம்மன் சன்னதி அருகே ஸ்ரீ சக்கர சுவாமிக்கு கோயில் குருக்கள் உதயகுமார் மஞ்சள், பால், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்மன் முத்தங்கி சேவை கோலத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 2ம் நாளான இன்று (செப்., 23) அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !