உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட அளவு சிலம்ப போட்டியில் விளங்குளத்துார் மாணவர்கள் வெற்றி

மாவட்ட அளவு சிலம்ப போட்டியில் விளங்குளத்துார் மாணவர்கள் வெற்றி

முதுகுளத்துார்: சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு சிலம்பக் கழகம் மற்றும் நேதாஜி அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, தொடு முறை ஆகிய பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் புலிமுருகன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் இருந்து 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒற்றைக்கம்பு பிரிவில் கலந்து கொண்டனர்.இதில் 20 மாணவர்கள் முதல் பரிசும், 10 மாணவர்கள் இரண்டாம் பரிசும், 10 மாணவர்கள் மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கோப்பை வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற விளங்குளத்துார் புலிமுருகன் சிலம்பம் பயிற்சி பள்ளி மாஸ்டர் முருகன் மற்றும் மாணவர்களை பெற்றோர், பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ