உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிற்பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தொழிற்பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம், தொழிற்பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) சார்பில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை -அறிவியல்- வணிகம் பட்டதாரிகள் 2021 முதல் 2025-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஓராண்டு தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்க்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு https://nats.education.gov.inஇணையதளம் வழியாக விண்ணப்பிக்க அக்.,18 கடைசி நாள் என அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ