உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில இளைஞர் விருது  பெற விண்ணப்பிக்கலாம்

மாநில இளைஞர் விருது  பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்வர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதன்படி 2025-ம் ஆண்டிற்கான முதல்வர் மாநில இளைஞர் விருது ஆக.,15 சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. கடந்த நிதியாண்டில் (2024--2025) அதாவது 2024 ஏப்.,1 முதல் 2025 மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.இணையதளம் மூலம் மே 3 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை