மேலும் செய்திகள்
வீட்டில் மூதாட்டி மர்ம மரணம்
14-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரி 31. இவரது கணவர் பூவேந்திரன் சவுதியில் வேலை பார்த்த நிலையில் தற்போது ஊர் திரும்பியவர் அங்குள்ள மதுபான கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பூவேந்திரன் மது அருந்தி வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு பின் சமாதானம் ஆகிவிடுவர். தீபாவளி முதல் பூவேந்திரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த முனீஸ்வரி அக்.,25ல் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Oct-2025