உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ரேஷன் கடை ஊழியர் 3 பேர் சஸ்பெண்ட்

ரேஷன் கடை ஊழியர் 3 பேர் சஸ்பெண்ட்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், முறைகேடு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர் மூன்று பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ஜாகிர்தண்டலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள கீழ்வெண்பாக்கம் ரேஷன் கடையில், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் சிவமணி ஆய்வு செய்தார்.அப்போது கடை விற்பனையாளர் பிரசாத், மேல் வெண்பாக்கம் கடை விற்பனையாளர் சந்தோஷ், கடையை உரிய நேரத்தில் திறக்காமல், கார்டுதாரர்களுக்கு பொருட்களை சரியாக வினியோகம் செய்யாதது தெரிந்தது. மேலும், வாலாஜா வட்டம் பிரதம கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடை எண்- 3ல் பணியாற்றும் அன்புமணி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.மூவர் குறித்தும், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகுமாரிடம் புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து மூவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, மண்டல இணைப்பதிவாளர் சிவக்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ