உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மூன்று வீடுகளில் 7 சவரன் திருட்டு

மூன்று வீடுகளில் 7 சவரன் திருட்டு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வடபாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரபு, 42. இவர், வழக்கம்போல் நேற்று ஆட்டோ ஓட்ட சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி பிள்ளையார், வெள்ளி நாணயங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதேபோல், அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கணேசன், 72, வீட்டின் பின்புற கதவை உடைத்து, மூன்றரை சவரன் தங்க நகை, கட்டட மேஸ்திரி ராம்கி, 34, என்பவரது வீட்டில் மூன்றரை சவரன் நகை திருடப்பட்டுள்ளது. அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ