உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மனித எலும்பு கூட்டை வைத்து திருவிழாவில் வினோத பூஜை

மனித எலும்பு கூட்டை வைத்து திருவிழாவில் வினோத பூஜை

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா திருவள்ளுவர் தெருவிலுள்ள கெங்கையம்மன் கோவிலில், நேற்று, 95ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், உடம்பில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில், மனித எலும்பு கூடு வைத்து, அந்த கிராமம் மற்றும் அங்கு வசிப்பவர்களுக்கு திருஷ்டி கழிக்கும் வினோத பூஜை நடந்தது. இதில், கிராமத்திலுள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ