உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / லாரி மோதி சுவர் இடிந்து அங்கன்வாடி ஊழியர் பலி

லாரி மோதி சுவர் இடிந்து அங்கன்வாடி ஊழியர் பலி

வாலாஜா,:ராணிப்பேட்டை, வாலாஜா அடுத்த ஈச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி, 35; அங்கன்வாடி மைய உதவியாளர். நேற்று மதியம் அங்கன்வாடி மைய வளாகத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 28, ஓட்டிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து, அங்கன்வாடி மையத்தின் சுவர் மீது மோதியது. இதில், சுவர் இடிந்து லட்சுமி மீது விழுந்ததில், படுகாயமடைந்த அவரை, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி இறந்ததாக தெரிவித்தனர். வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ