உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / மேஸ்திரி உயிரிழப்பு ஐவர் கைது

மேஸ்திரி உயிரிழப்பு ஐவர் கைது

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்த சேட்டு, 40, என்பவர் சடலமாக கிடந்தார்.அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.அதில், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், சேட்டுக்கும் முன்விரோதம் இருந்ததுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஐந்து பேர் சேட்டுவை தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து, அந்த ஐந்து பேரும் தலைமறைவாகியதும் தெரியவந்தது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஐந்து பேரை போலீசார் தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி, 22, இசாக், 20, ராஜேஷ், 35, ராமதாஸ், 41, ராமச்சந்திரன், 44 ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை