உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / முருகன் கோவில் கலசம் திருட்டு

முருகன் கோவில் கலசம் திருட்டு

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம், நல்லுார்பேட்டை பகுதியில், மதனந்தக நல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் முருகனுக்கு தனி சன்னதி உள்ளது.நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், முருகன் கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து, கோவில் அறங்காவலர் சம்பத் அளித்த புகாரின் படி, நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்