உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார் போக்சோவில் கைது

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார் போக்சோவில் கைது

ராணிப்பேட்டை, : ராணிப்பேட்டை அருகே, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் நடத்தி வரும் பாதிரியார் ரகுராஜ்குமார், 54. கடந்த ஆண்டு டிசம்பரில் சர்ச்சுக்கு வந்த, 14 வயது சிறுமியிடம், ரகுராஜ்குமார் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என, சிறுமியை மிரட்டினார். பின் வீட்டிற்கு சென்ற சிறுமி, கவலையாக இருந்ததை பார்த்து தாய் விசாரித்துள்ளார்.அப்போது சிறுமி நடந்ததை கூறினார். இது குறித்து சிறுமியின் தாய், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பாதிரியார் தலைமறைவானார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாதிரியார் ரகுராஜ் குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ