உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / பெருமாள் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

பெருமாள் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொடைக்கல் கிராமம். இந்த கிராமத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில். சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலின் வடக்கில் சிறிய குன்றின் மீது இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலின் அருகே தெப்பகுளமும் உள்ளது. குளத்தின் நான்கு திசைகளிலும் பழமையான நீர்வரத்து கட்டமைப்புடன் இந்த குளம் காணப்படுகிறது. சீரான படிகள் இன்றி கற்களுடன் குளக்கரை அமைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால், இந்த குளக்கரை சீரழிந்து சரிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தெப்பத்திருவிழாவும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை. பழமையான இந்த குளத்தை சீரமைத்து மீண்டும் தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி