குளத்தில் மூழ்கி மாணவன் பலி
அரக்கோணம்,:அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருப்பதி, 35. இவரது மகன் கமலேஷ், 6. இவர், அப்பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கியதில் அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்க முயன்றனர். அதற்குள் கமலேஷ் நீரில் மூழ்கி பலியானார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.