உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வெங்கடேசப் பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் விமரிசை

வெங்கடேசப் பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் விமரிசை

சித்துார்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சித்துார் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்று, மஹா கும்பாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.இந்த விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம், காலை 10:00 மணி அளவில், மஹாசுதர் நடன ஹோமத்துடன் துவங்கியது. நேற்று, காலை 5:00 மணிக்கு கோ பூஜையுடன், 7:00 மணிக்கு கலச புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து, வெங்கடேசப் பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி