உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / வேளாண் அதிகாரியிடம் விஜிலென்ஸ் விசாரணை

வேளாண் அதிகாரியிடம் விஜிலென்ஸ் விசாரணை

அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வேடல் கிராமம் காந்தி நகரில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. நிலத்தை பார்வையிடவும், தடையில்லா சான்று வழங்க பரிந்துரைக்கவும் ராணிபேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் -- பொறுப்பு தபேந்திரன், 59, நேற்று வந்தார்.அவர், தடையில்லா சான்றுக்கு பரிந்துரைக்க லஞ்சம் கேட்பதாக வேலுார் மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலருக்கு புகார் சென்றது. இதையடுத்து அலுவலர் பூமா, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார்.அதன்படி அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார் அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தனர். அவ்வழியாக வந்த தபேந்திரன் காரை மறித்து சோதனை செய்த போது, 1 லட்சத்து 26,000 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர்.அப்போது தபேந்திரன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை