உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / போலி டாக்டர்கள் 2 பேர் கைது

போலி டாக்டர்கள் 2 பேர் கைது

அரக்கோணம் : அரக்கோணம் அருகே, போலி டாக்டர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதிகளில் சிலர், மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் சென்றது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சரண்யா, அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரெஜினா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, அரக்கோணம் அடுத்த கோணலம் பகுதியில் சோதனை நடத்தினர். இதில், அரக்கோணத்தை சேர்ந்த ஜாகீர்உசேன், 47, என்பவர் டிப்ளமோ படித்து விட்டு, மருந்து கடை வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், காவனுார் நரசிங்கபுரத்தில், பாரூக் உசேன், 48, என்பவர், பிளஸ் 2 மட்டும் படித்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இருவரையும், அரக்கோணம் தாலுகா போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஆங்கில மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ