உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கள்ளநோட்டு அச்சடித்த 6 பேர் கைது யு டியூப் பார்த்து தயாரித்தது அம்பலம்

கள்ளநோட்டு அச்சடித்த 6 பேர் கைது யு டியூப் பார்த்து தயாரித்தது அம்பலம்

ராணிப்பேட்டை: கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் முத்துராமன், 41. இவர் தான் வைத்திருந்த லாரியை வாலாஜாபேட்டையைச் சேர்ந்த அஸ்கர் பாஷா, 49, உள்ளிட்ட ஆறு பேர் வாங்கினர். லாரி விற்ற பணத்தை கொண்டு, தான் அடகு வைத்திருந்த நகையை மீட்க, முத்துராமன் வங்கியில் பணம் செலுத்தினார். அதில் 10,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிந்தது. வங்கி மேலாளர் புகாரின்படி, ராணிப்பேட்டை போலீசார், முத்துராமனிடம் விசாரித்தனர். அவர், தான் லாரியை விற்று, அதில் கிடைத்த பணத்தில், நகையை மீட்க வந்ததை கூறினார். லாரியை வாங்கிய அஸ்கர் உள்ளிட்ட ஆறு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் , அவர்களது வீட்டில் நடத்திய சோதனையில் கள்ள நோட்டு அச்சடித்த இயந்திரம், கணினி, கள்ள நோட்டுக்கள் ஆகியவை இருப்பது தெரிய வந்தன. இதையடுத்து, ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட ஆறு பேரும் 'யுடியூப்' எனும் சமூக வலைதளத்தை பார்த்து, கள்ள நோட்டுகளை அச்சடித்து, அப்போது தான் புழக்கத்தில் விட்டு போலீசிடம் சிக்கியது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !