உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தீப்பிடித்து எரிந்த கார்; 8 பேர் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த கார்; 8 பேர் உயிர் தப்பினர்

அரக்கோணம் : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், 50. இவர், நேற்று தன் உறவினர்கள் ஏழு பேரை, 'ஸ்கார்பியோ' காரில் அழைத்துக்கொண்டு, அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் சென்றார். இச்சிப்புத்துார் கிராமம் அருகே, திடீரென கார் இன்ஜினிலிருந்து புகை வந்தது. இதை கவனித்த சாலையில் சென்ற பொதுமக்கள், மணிவண்ணனை எச்சரித்தனர். உடனடியாக அவர் காரை நிறுத்தி, காரில் இருந்த அனைவரையும் கீழே இறக்கினார். சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து, மளமளவென எரிய துவங்கியது. அரக்கோணம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த, எட்டுபேரும் தப்பினர். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ