வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய தம்பதி சிக்கினர்
கலவை: கலவை அருகே, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கணவன் - மனைவியை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா, குட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 70. இவரது மனைவி வள்ளியம்மை, 60. இருவரும் விவசாய கூலிகள். இந்நிலையில், துரைசாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அவர்களது வீட்டில், போலீசார் சோதனை செய்தனர். அப்போது இருவரும் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்திற்காக ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி வந்தது தெரிந்தது. இதையடுத்து கலவை போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க போடப்பட்ட ஊறலையும் அழித்தனர்.