உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க.,வை சேர்ந்த அஸ்வினி, 44; இவரது கணவர் சுதாகர், 48. அப்பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி அவினேஷ்குமார், 28; இவரின் தாயை, சில நாட்களுக்கு முன் நடந்த தகராறில் சுதாகர் திட்டியுள்ளார்.நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு வெளியே நின்றிருந்த சுதாகரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவினேஷ்குமார், அவரை கத்தியால் வெட்டினார். இதில், காயமடைந்த சுதாகர், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்த அவினேஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை