கான்கிரீட் பீம் லாரியுடன் பஸ் மோதியதில் டிரைவர் பலி
ஆற்காடு:காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு, வீடு கட்டும் கான்கிரீட் பீம்களை ஏற்றிய லாரி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் சென்றது. அதே சமயம் சென்னையிலிருந்து, 25 பயணியருடன் பெங்களூருவுக்கு தனியார் சொகுசு பஸ் சென்றது. டிரைவர் ஹரீஷ்குமார், 35, ஓட்டினார். துாக்க கலக்கத்தில் முன்னால் சென்ற லாரி மீது மோதினார். கான்கிரீட் பீம் பஸ்சுக்குள் புகுந்ததில் ஹரீஷ்குமார் பலியானார். 23 பயணியர் காயமடைந்தனர். அனைவரும் ஆற்காடு மற்றும் வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.