மேலும் செய்திகள்
'பைக்'கிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
22-Feb-2025
குளத்தில் மூழ்கி மாணவன் பலி
07-Mar-2025
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆனைப்பாக்கத்தை சேர்ந்தவர் பூஜா, 22. இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.கடந்த 13ம் தேதி இரவு பணி முடித்து விட்டு, தொழிற்சாலைக்கு சொந்தமான வேனில் வீடு திரும்பினார். பேரம்பாக்கம் அடுத்த சின்னமண்டலி அருகே வேன் வந்த போது, வளைவு பகுதியில் ஓட்டுனர் திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார்.அப்போது, வேனில் இருந்த கைப்பிடி கம்பியில் பூஜா மோதிக் கொண்டார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Feb-2025
07-Mar-2025