உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

திருமால்பூர்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூர் பெரிய தெருவில், செல்வவிநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன்- 4ம் தேதி கணபதி பூஜை மற்றும் யாக கால பூஜையுடன் துவங்கி உள்ளது.நேற்று, காலை 8:00 மணிக்கு, கலச புறப்பாடும், அதை தொடர்ந்து காலை 8:10 மணிக்கு, சிவாச்சாரியார் புனித நீரை கலச கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்தின் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தார்.இதையடுத்து, மூலவர் செல்வவிநாயகருக்கு மஹா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !