உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / கன்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி கர்ப்பிணி பலி

கன்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி கர்ப்பிணி பலி

ராணிப்பேட்டை, வாலாஜா அருகே, கன்டெய்னர் லாரி மோதி, உடல் நசுங்கி கர்ப்பிணி பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென் கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி சுஜாதா, 32. தம்பதிக்கு ஏற்கனவே, 10 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், சுஜாதா தற்போது, 8 மாதம் கர்ப்பமாக இருந்தார். நேற்று காலை தன் உறவினருடன் வேலுாரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஹோண்டா மொபட்டில் சென்றார். தென் கடப்பந்தாங்கல் பகுதியில், சாலை மேம்பால பணிகளால், வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக செல்கின்றன. அந்த வழியாக அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுஜாதா மீது, கன்டெய்னர் லாரி ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை