உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / தனியார் ஊழியர் வெட்டி கொலை

தனியார் ஊழியர் வெட்டி கொலை

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை அருகே, தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பானாவரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 43, இவர் மனைவி வெண்ணிலா. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் புலிவலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்த வீட்டிற்கு சென்றார். அவரது வீட்டிற்கு அருகே மாலை, 5:30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழி மறித்து கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். பானாவரம் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையான பாலகிருஷ்ணன், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட, பா.ம.க., அமைப்பு செயலாளர் அ.ம.கிருஷ்ணன் என்பவரின் சித்தப்பா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ