உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / பாலாற்றங்கரையில் புஷ்கரணி வழிபாடு

பாலாற்றங்கரையில் புஷ்கரணி வழிபாடு

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் ஆற்காடு பாலாறு பப்ளிக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து, பாலாறு பெருவிழா, 3ம் ஆண்டு ரத யாத்திரை நேற்று நடத்தின. ரத்தனகிரி பாலமுருகனடிமை மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள், யாத்திரயை தொடங்கி வைத்தனர். முன்னதாக வேப்பூர் பொன்னியம்மன் கோவிலிலுள்ள கங்கையம்மனுக்கு, நதிகளை பாதுகாக்க வேண்டியும், மழை வேண்டியும், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, யாத்திரை தொடங்கியது.யாத்திரையுடன், பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக ஆற்காடு பாலாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு புஷ்கரணி சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை நடத்தி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை