அரக்கோணம் அருகே ரயிலில் புகை
அரக்கோணம்,:திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும், சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் அருகே நேற்று காலை, 8:25 மணிக்கு சென்றது. அப்போது, பி - 2, 'ஏசி' பெட்டியில் திடீரென புகை வந்தது. இதை பார்த்த ரயில் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பயணியர் அதிர்ச்சியடைந்து அலறி யடித்து வெளியேறினர். ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பான் கருவியால் தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. ஆய்வில், ரயில் சக்கரத்துடன் இரும்பு பிரேக் உரசியதால், தீப்பற்றி புகை வந்தது தெரிந்தது. பழுது சரி செய்யப்பட்ட நிலையில், ரயில் 8:59 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது.