உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / விபத்தில் சிக்கி பலியான கணவர் உடலை பார்க்க சென்ற மனைவி பலி

விபத்தில் சிக்கி பலியான கணவர் உடலை பார்க்க சென்ற மனைவி பலி

ஆற்காடு ' ஆற்காடு அருகே, விபத்தில் சிக்கி பலியான கணவரின் உடலை பார்க்க சென்ற மனைவி, ஸ்கூட்டியிலிருந்து தவறி விழுந்ததில் பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவையை சேர்ந்தவர் பிரகாசம், 51, இவர், வேப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுந்தரி, 45. இவர்களது மகள் வித்யா, 21. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் பணி முடிந்து பிரகாசம், ெஹல்மெட் அணியாமல் பஜாஜ் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில், அடையாளம் தெரியாத மற்றொரு பைக் மோதிய விபத்தில் பலியானார்.தகவலறிந்த சுந்தரி, விபத்தில் சிக்கி பலியான கணவர் உடலை பார்க்க ெஹல்மெட் அணியாமல் ேஹாண்டா ஸ்கூட்டியில், தன் மகள் வித்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில், வேகத்தடை இருப்பதை அறியாமல் சென்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், சுந்தரி பலத்த படுகாயமடைந்து, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். வித்யா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை