உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சங்ககிரியில் மக்கள் சார்பாககேமரா பொருத்தும் பணி தீவிரம்

சங்ககிரியில் மக்கள் சார்பாககேமரா பொருத்தும் பணி தீவிரம்

சங்ககிரியில் மக்கள் சார்பாககேமரா பொருத்தும் பணி தீவிரம்சங்ககிரி:சங்ககிரி, வி.என்.பாளையத்தில், யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப், ஊர் பொதுமக்கள் பங்களிப்பில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட உள்ள இடங்களை, இன்ஸ்பெக்டர் ஆய்வு செய்தார். வி.என்.பாளையத்தில் பாதுகாப்பிற்காக, யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து, வி.என்.பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் நவீன, 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர்.இதையடுத்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரமேஷ், சங்ககிரி வி.என்.பாளையம் முழுவதும் ஆய்வு செய்து, கேமராக்களை பொருத்து வதற்கான இடங்களை தேர்வு செய்தார். இதன்படி ஒன்பது 'சிசிடிவி'கேமராக்களை பொருத்தும் பணியை நேற்று துவக்கினர்.யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், சங்ககிரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார், ரவிசங்கர், பா.ம.க., நகர செயலாளர் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.சங்ககிரி நகரில் ஏற்கனவே கடந்த மாதம், 24ல், 33 இடங்களில், 106 'சிசிடிவி' நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை