அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வழியில்லைகிராம ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் டம்மி
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வழியில்லைகிராம ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் 'டம்மி'சேலம் :தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம், கடந்த 5ல் முடிவடைந்து விட்டதால், மறுநாள் 6 முதல், தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.அதன்படி,கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, தனி அலுவலர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.இனி அவர்கள், ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தலைவருக்கான பணிகளை மேற்கொள்ளவும், துணைத்தலைவருக்கான பணிகளை, அந்தந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழிநடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.எனினும் தனி அலுவலரால், மூலதன பணிகளை மேற்கொள்ள முடியாமல், 'டம்மி'யாக தொடரும் நிலை உள்ளது. மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானியத்தில் தான், மூலதன பணிகளான, புதிதாக சாலை அமைத்தல், குடிநீர், சாக்கடை பணிகள், சுகாதாரம் பேணுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊரக உள்ளாட்சி இணையத்தில், மூலதன பணிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான (டி.எஸ்.சி., எனப்படும் டிஜிட்டல் சிக்நேச்சர் கார்டு) தரவுகள், இன்னமும் பதிவேற்றம் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது.அதனால் தனி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் மூலதல பணி மேற்கொள்ள முடியாத அவலம் தொடர்கிறது. அத்துடன், கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே முடிக்கப்பட்ட மூலதன பணிக்கான தொகையையும் விடுவிக்கமுடியாத சூழல் நிலவுகிறது. அதனால், ஒப்பந்ததாரர்கள் செய்வதறியாமல் பரிதவித்து வருகின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் கூறியதாவது:ஒவ்வொரு ஊராட்சிகளிலும், மூலதன நிதியில் குறைந்தது 4 -5 பணிகள் முடிந்து, அதற்கான பில் இன்னமும் பாஸாகவில்லை. அதனால், ஒப்பந்ததாரர், அடுத்தப்பணி மேற்கொள்வது கேள்விகுறியாகிவிட்டதாக புலம்புகின்றனர். இதேநிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.எனவே, தனி அலுவலர்கள், நிதியை கையாள்வதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டால் மட்டுமே உள்ளாட்சிகளின் நிலைமை சீராகும். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.