உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் ரெய்டை காரணம் காட்டி சேலத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு

போலீஸ் ரெய்டை காரணம் காட்டி சேலத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு

சேலம்: சேலத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் சேர்ந்து போலீஸார் நடத்தி வரும் ரெய்டை காரணம் காட்டி, ஷேர் ஆட்டோ கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டது.சேலத்தில், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் இருந்து சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, ஜங்ஷன், சூரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.சேலம் மாநகரில் சேலம் மேற்கு, கிழக்கு ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தலா, 50 ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நகரில் நூற்றுக் கணக்கான ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து சேலம் மாநகரில் இயங்கும் ஆட்டோக்களை முறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை அடுத்து போக்குவரத்து அதிகாரிகள், சில நாட்களாக அதிரடி சோதனை மேற் கொண்டு ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இது வரை சேலம் மாநகரில் மட்டும், 140 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முறையற்ற ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்களை போக்குவரத்து துறையின் பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகளின் அதிரடி ரெய்டை கராணம் காட்டி தற்போது நகரில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.நேற்று முதல் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி பகுதிக்கான கட்டணம், ஐந்து ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தி உள்ளனர். இதே போல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டிக்கான கட்டணம், ஐந்து ரூபாய் என்பது, எட்டு ரூபாயாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களின் கட்டணத்திலும், இரண்டு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்களின் இந்த கட்டண கொள்ளை அரங்கேற்றத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முறைப் படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி