உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூரை வீட்டுக்கு தீ வைத்த தந்தை - மகன் கைது

கூரை வீட்டுக்கு தீ வைத்த தந்தை - மகன் கைது

கூரை வீட்டுக்கு தீ வைத்த தந்தை - மகன் கைதுமேட்டூர் : மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பாப்பாத்தி, 65. அவருக்கு, அருகே உள்ள அண்ணா நகரில் இரு கூரை வீடு, ஒரு ஓட்டு வீடு உள்ளன. ஒரு கூரை வீட்டை, இருசாகவுண்டர் என்பவருக்கு, மாதம், 1,000 ரூபாய் வாடகைக்கும், மற்றொரு வீட்டை உறவினர் செல்வத்துக்கும், வாடகைக்கு விட்டுள்ளார். இருசாகவுண்டர், 2 மாதமாக வாடகை வழங்கவில்லை.நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, பாப்பாத்தி, அவரது கணவர் சண்முகம் ஆகியோர், இருசாகவுண்டர் வீட்டுக்கு சென்று வாடகை கேட்டனர். அதற்கு, 'தர முடியாது. வீட்டையும் காலி செய்ய முடியாது' என, இருசாகவுண்டர் மகன் வினோத்குமார் கூறி, சண்முகத்தை தள்ளிவிட்டார். பின் வீடு திரும்பிய பாப்பாத்தியிடம், இரவு, 9:30 மணிக்கு, செல்வம், கூரை வீட்டுக்கு இருசாகவுண்டர், வினோத்குமார் தீ வைத்ததாக, மொபைலில் கூறியுள்ளார். அங்கு வந்த பாப்பாத்தி, தீயணைப்பு, மீட்பு குழுவினரை வரவழைத்து, தீயை அணைத்துள்ளார். இதுதொடர்பாக பாப்பாத்தி புகார்படி கருமலைக்கூடல் போலீசார், கூரை வீட்டுக்கு தீ வைத்த இருசாகவுண்டர், 55, வினோத்குமார், 26, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி