மகனை பார்க்க அனுமதி மறுத்த மனைவிசாலையில் சுருண்டு விழுந்து தந்தை பலி
மகனை பார்க்க அனுமதி மறுத்த மனைவிசாலையில் சுருண்டு விழுந்து தந்தை பலிஈரோடு:பிரிந்து வாழும் மனைவியுடன் உள்ள மகனை பார்க்க, ஈரோட்டுக்கு கணவர் வந்தார். மகனை பார்க்க மனைவி குடும்பத்தார் மறுத்த நிலை யில், சாலையில் நடந்து சென்றவர், திடீரென விழுந்து இறந்து பலியானார்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொமராயனுாரை சேர்ந்தவர் பசுவராஜ், 35, பெயிண்டர். இவருக்கு ஏழு ஆண்டுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. மனைவி பேபி சித்ரா, 31; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் தம்பதியர் பிரிந்து விட்டனர். ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தில் தந்தை வீட்டில் மகனுடன் பேபி சித்ரா வசிக்கிறார்.இந்நிலையில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு பசுவராஜ் ஈரோட்டுக்கு நேற்று வந்தார். தன் மகனை பார்க்க ராஜாஜிபுரம் சென்றுள்ளார். மகனை காட்ட மறுத்து, நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்குமாறு பேபி சித்ரா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையுடன் அங்கிருந்து கொங்காலம்மன் கோவில் பகுதிக்கு சென்றார். பின் பவானி சாலையில் நடந்து சென்றார். ராஜாஜிபுரம் நேர் எதிரே பழைய ஸ்டார் தியேட்டர் முன்பகுதியில் திடீரென சாலையில் விழுந்தார். பேச்சு, மூச்சின்றி இருந்ததால், அப்பகுதி மக்கள் கருங்கல்பாளைம் போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பசுவராஜ் இறந்து விட்டது உறுதியானது. இதனால் உடலை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். மகனை பார்க்க முடியாத வேதனையில் சென்ற தந்தை, சுருண்டு விழுந்து பலியானது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தங்கவேல் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள, 13 உழவர்சந்தை விவசாயிகள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையில் ஈடுபட, போஸ்ட் மேமெண்ட் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கவும், ஆண்டுக்கு, 550 ரூபாய் பிரிமியத்தில், 10 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு திட்டத்தில் இணையவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.