உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரி வசூலிக்க முடியாவிட்டால் கடன் வாங்கி கட்டுங்க...ஒன்றிய அதிகாரிகளால் ஊராட்சி செயலர்கள் விழிபிதுங்கல்

வரி வசூலிக்க முடியாவிட்டால் கடன் வாங்கி கட்டுங்க...ஒன்றிய அதிகாரிகளால் ஊராட்சி செயலர்கள் விழிபிதுங்கல்

'வரி வசூலிக்க முடியாவிட்டால் கடன் வாங்கி கட்டுங்க...'ஒன்றிய அதிகாரிகளால் ஊராட்சி செயலர்கள் விழிபிதுங்கல்பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள, 20 ஊராட்சிகளை, 15 செயலர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். அங்கு, பி.டி.ஓ., கிராம ஊராட்சி தனி அலுவலராக உள்ளார். ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை, 20 சதவீத மக்கள், ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர். இதில், 2024 - 2025ம் ஆண்டுக்கு பெரும்பாலான ஊராட்சிகளில், 20 முதல், 40 சதவீத வரி நிலுவையில் உள்ளது.நேற்று ஒன்றிய அலுவலகத்தில், வீட்டு வரி, குடிநீர் கட்டணம் வசூல் தொடர்பாக, ஊராட்சி செயலர்களுடன், ஒன்றிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, 'ஊராட்சியில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், வரும், 31க்குள் முழுமையாக வசூலிக்க வேண்டும். முடியவில்லை என்றால், வெளியே கடன் வாங்கி கட்டி கணக்கை முடியுங்கள். பின் வசூல் செய்துகொள்ளுங்கள்' என, ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால், ஊராட்சி செயலாளர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அரசுக்கு வரவேண்டிய வருவாய் இனங்களை வசூலிப்பது செயலர்களின் முக்கிய பொறுப்பு. அவர்கள் நேரடியாக வரி வசூலிக்க செல்வதில்லை. மற்ற பணியாளர்களை அனுப்புவதால் தாமதம் ஏற்படுகிறது. மாவட்டத்தில் குடிநீர் கட்டணம் வசூலிப்பதில், பனமரத்துப்பட்டி கடைசி இடத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் பதில் சொல்ல வேண்டி உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ