உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆன்லைனில் கட்டட வரைபட அனுமதி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை

ஆன்லைனில் கட்டட வரைபட அனுமதி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை

ஆன்லைனில் கட்டட வரைபட அனுமதி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைபனமரத்துப்பட்டி, :சேலம் மாவட்டத்தில், 130 கிராம ஊராட்சிகள் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. அந்த ஊராட்சிகளில், புதியதாக வீடு கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், அமானிகொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, நிலவாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகள் மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. நேற்று, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் படி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டட வரைபட அனுமதி உடனுக்கு உடன் வழங்க வேண்டும். பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பல்வேறு வகை உரிமம் தொகை உள்ளிட்டவை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை