உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாழ்க்கை பாலம் திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு

வாழ்க்கை பாலம் திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசு

'வாழ்க்கை பாலம்' திட்டம் சிறை பணியாளர், கைதிக்கு பரிசுசேலம்சேலம் மத்திய சிறையில், உயர் பாதுகாப்பு தொகுதி, சிறை குற்றம் புரியும் கைதிகள் தொகுதி தவிர்த்து, மற்ற, 17 தொகுதிகளில் தலா ஒரு கைதிகள் நியமிக்கப்பட்டு, அத்தொகுதியில் உள்ள கைதிகள் யாரும் தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள் என்றால், மன இயல் பிரிவு உதவியுடன் தற்கொலையை தடுக்கும், 'வாழ்க்கை பாலம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஓராண்டுக்கு மேலாக கைதிகள் தற்கொலை செய்யாமல் உன்னிப்பாக கவனித்த மன இயல் பரிவு பணியாளர்கள், கைதிகளுக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.கோவை சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், கைதிகள் தற்கொலை எண்ணங்கள் பற்றிய அனுபவம் குறித்து கேட்டறிந்தார். பின் சிறப்பாக செயல்பட்ட மன இயல் பிரிவு பணியாளர்கள், கைதிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். சிறை கண்காணிப்பாளர் வினோத், சிறை அலுவலர் ராஜேந்திரன், துணை சிறை அலுவலர் குமார், மன இயல் நிபுணர் வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை