சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா
சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழாசேலம்,:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன வைபவ விழா நாளை தொடங்க உள்ளது. காலை, 10:30 முதல், மதியம், 12:00 மணிக்குள் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது. நள்ளிரவு, 12:15 மணிக்கு ஆருத்ரா அபிேஷக வைபவம் தொடங்கி, நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் விடிய விடிய காலை, 5:00 மணி வரை அபிேஷகம் நடக்க உள்ளது. 13 காலை, 7:00 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி, 9:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள் திருவீதி உலா வைபவம் நடக்கும். மேலும் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு தங்க கவச சாத்துபடி நிகழ்ச்சி நடக்கும்.