உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழுக்கு மரம் ஏறிய பெண்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரிசு

வழுக்கு மரம் ஏறிய பெண்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரிசு

ஆத்துார்,: பொங்கல் பண்டிகையையொட்டி, ஆத்துார் அருகே கல்பகனுாரில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் நேற்று, 50 அடி உயர வழுக்கு மரத்தில் பெண்கள் ஏறும் போட்டி நடந்தது. மரம் மீது சில்வர் குடம், பண முடிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் திருமணமான, திருமணமாகாத பெண்கள் என, தனித்தனியே போட்டி நடந்தது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் ஏறினர். அவர்களால் பாதி துாரம் மட்டுமே ஏற முடிந்தது. இருப்பினும் அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.206 பேருக்கு பரிசுபொங்கலையொட்டி, சங்ககிரி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில், ஓட்டம், கோணிப்பை ஓட்டம், கராத்தே, இசை நாற்காலி, வாலிபால், குண்டு எறிதல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள், வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோவில் அருகே கடந்த, 14, 15ல் நடத்தப்பட்டன. அதில் திரளானோர், திறமையை வெளிப்படுத்தினர். அதில் வெற்றி பெற்ற, 206 பேருக்கு, கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், நேற்று முன்தினம் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை