மேலும் செய்திகள்
இலக்கை தாண்டிய பசுமைப் பயணம்!
25-Dec-2024
மரக்கன்று அகற்றியதால் பிரச்னை தாசில்தாரிடம் தீர்க்க அறிவுரைதாரமங்கலம், :தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி, மாவு கரடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு நிலம் உள்ளது. அந்த இடத்துக்கு முன்பிருந்த புறம்போக்கு இடத்தை அன்பழகன், தடமாக பயன்படுத்தி வந்தார். அந்த இடத்தில், ராமிரெட்டிபட்டி ஊராட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த டிச., 26ல், 50 புளிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால் பாதை அடைக்கப்பட்டதால், அன்பழகன், கிராம பி.டி.ஓ., சத்தியேந்திரனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து அதிகாரிகள் பேசி வந்த நிலையில், அங்கிருந்த சில மரக்கன்றுகள் அகற்றப்பட்டதாக கூறி, நேற்று இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாரமங்கலம் போலீசார், நிலம் தொடர்பான பிரச்னை என்பதால் ஓமலுார் தாசில்தாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.
25-Dec-2024