பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம்சுண்ணாம்புக்கார தெரு மக்கள் தர்ணாசேலம்:
பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம்சுண்ணாம்புக்கார தெரு மக்கள் தர்ணாசேலம்:சேலம், கொண்டலாம்பட்டி, சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், நேற்று, மாநகராட்சி அலுவலகம் வந்து, நுழைவாயில் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நீண்ட நாள் கோரிக்கை, போராட்டத்துக்கு பின், கடந்த ஆண்டு தான் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்துக்கு சாலையை தோண்ட வந்துள்ளனர். ஏற்கனவே பள்ளமாக இருப்பதால் மழைநீர் தேங்கி, சேறும் சகதியாக மாறிவிடுகிறது. தற்போது பாதாள சாக்கடை அமைத்தால், சாலை சேதமாவதோடு, அதன் கழிவு நீரும் எங்கள் பகுதியில் வெளியேற வாய்ப்புள்ளது. அதனால் இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தி, புகாரை மனுவாக பெற்று, நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.