குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம்மாவட்ட விவசாயிகள் பயன்பெற அழைப்பு
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம்மாவட்ட விவசாயிகள் பயன்பெற அழைப்புசேலம்:சேலம் மாவட்ட விவசாயிகள், வேளாண் இயந்திரம், கருவிகளை, இருப்பிடத்தில் இருந்தே இ -வாடகை மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, வாடகை தொகையையும் செலுத்தலாம். அச்செயலியில் ஆன்லைன் மூலம் வாடகை முன்பணம் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்களை, அரசு நிர்ணயித்த குறைந்த வாடகைக்கு பெறலாம். அதற்கு பிரத்யேக இணைய முகவரியில் இருந்து, விவசாயிகள், அவரவர் மொபைலில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள இ-வாடகை செயலியில் விண்ணப்பிக்கலாம். தவிர வேளாண் பொறியியல் துறையின் இணையதளமான, https://mts.aed.tn.gov.in./evaadagai மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும், டிராக்டருடன் மணிக்கு, 500 ரூபாய், மண் அள்ளும் இயந்திரம், 1,230 ரூபாய், மண் அள்ள, பண்ணைக்குட்டை அமைக்க, புதர்களை அகற்ற, டிராக்வகை மண் அள்ளும் இயந்திரம், 1,910 ரூபாய், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், 890 ரூபாய், தேங்காய் பறிக்கும் இயந்திரம், 450 ரூபாய் அளவில், விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. மேலும் சேலம் மாவட்ட வேளாண் செயற்பொறியாளர், வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர், அந்தந்த வட்டார உதவி பொறியாளர், இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.