மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்
மாநகரில் குடிநீர் பிரச்னைமக்கள் புகார் தெரிவிக்கலாம்சேலம்:குடிநீர் பிரச்னை குறித்து, சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.கூட்ட முடிவில் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளுக்கும் குடிநீர் சீராக கிடைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரிகளுடன் ஆலோசித்து குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை எங்கும் வராமல் இருக்க, தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குடிநீர் பிரச்னை இருப்போர், 0427 - 2212844 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் குப்பை தேங்காமல் உடனுக்குடன் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, அஸ்தம்பட்டி மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதியில், அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்து, மாநகராட்சி முழுதும் குடிநீர் வினியோகம் சீராக இருக்க வேண்டும்; பிரச்னை ஏற்பட்டால், லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க உத்தரவிட்டார்.