மேலும் செய்திகள்
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
24-Jan-2025
வருவாய் கிராம ஊழியர் காத்திருப்பு போராட்டம்சேலம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.இறந்த கிராம உதவியாளர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குதல்; காலமுறை ஊதியம் அல்லது அரசு ஊழியர் அட்டவணை, 'டி' பிரிவில் இணைத்திட வேண்டும்; இறந்த, ஓய்வு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசினார். வட்ட செயலர் சரவணன், பொருளாளர் இளவேந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். இத்துடன் சேர்த்து, மாவட்டத்தில் உள்ள, 14 தாலுகா அலுவலத்திலும், கிராம ஊழியர் சங்கத்தினர் மாலை நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24-Jan-2025