இன்று தோகைமலை வட்டாரத்தில்மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கரூர்:தோகைமலை வட்டாரத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், தோகைமலை வட்டாரத்தில் இன்று (18ம் தேதி) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது. இதில், நெய்தலுார் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல்காரன்பட்டி சமுததாய கூடம், பொருந்தலுார் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி, கழுகூர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, சின்னப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முகாம் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.