உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிரிவலத்தில் மலர்ந்த காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

கிரிவலத்தில் மலர்ந்த காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

கிரிவலத்தில் மலர்ந்த காதல்ஜோடி போலீசில் தஞ்சம்ஆத்துார்:பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் விஜயபாரதி, 22. கூலித்தொழிலாளி. இவர் திருவண்ணாமலை சிவன் கோவிலுக்கு கிரிவலம் சென்றபோது, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் சிந்து, 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் காதலித்த நிலையில், இரு நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், நேற்று வீரகனுார் ராயர்பாளையம் குமரன் மலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு தரப்பு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தியதில், சிந்துவின் பெற் றோர் ஏற்கவில்லை. இதனால் விஜயபாரதியுடன், சிந்துவை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி