உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புதிதாக திறந்த மதுக்கடை: சாலை மறியலால் மூடல்

புதிதாக திறந்த மதுக்கடை: சாலை மறியலால் மூடல்

புதிதாக திறந்த மதுக்கடை: சாலை மறியலால் மூடல்சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, புட்டாமெஷின் ரோட்டில் நேற்று, மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணியின்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி திறக்கப்பட்ட கடையால் ஆவேசமடைந்த மக்கள், நேற்று மாலை, 5:15 மணிக்கு, சங்ககிரி - சேலம் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து தடைபட்டது. அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் வாசுதேவன் தலைமையில் போலீசார் வந்து பேச்சு நடத்தினர். அப்போது, 'மதுக்கடையை மூட வேண்டும். இனி திறக்கக்கூடாது' என, கோரிக்கை வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளிக்க, மக்கள், மறியலை கைவிட்டனர். பின், மக்களிடம் கோரிக்கை மனு பெற்ற உதவி கமிஷனர், கலெக்டருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தற்காலிகமாக மதுக்கடை மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ