உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜீவா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

ஜீவா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

ஜீவா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனைசேலம்:வீரபாண்டி, கல்பாரப்பட்டி ஊராட்சி சேவம்பாளையம் ஜீவா பப்ளிக் பள்ளி தலைவர் அங்கமுத்து அறிக்கை:ஜீவா பப்ளிக் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் லோகித் பிரணவ், சந்தோஷ், கடந்த பிப்., 15, 16ல், புதுக்கோட்டையில் நடந்த மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 'சிறந்த ஆய்வறிக்கை' பரிசை பெற்றனர். இதன்மூலம் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தனியார் பள்ளி என்ற பெருமையை, ஜீவா பள்ளி பெற்றது.ஒலிம்பியாட் போட்டித்தேர்வுகளில், 2ம் வகுப்பு மாணவி அதித்ரிராஜன், உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்றார். 8ம் வகுப்பு லக்சனா, 2ம் வகுப்பு லக்சித்தா, 9ம் வகுப்பு முகேஷ், 7ம் வகுப்பு கீர்த்தி, 7ம் வகுப்பு மதுநிஷா ஆகியோர், தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில், பிளஸ் 2 மாணவி விஷ்வித்தா தங்கம் வென்று பள்ளிக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்த்தார். இந்த ஆண்டு நடந்த, சி.ஏ., இன்டர்மீடியேட் தேர்வில், இப்பள்ளியில் படித்த மாணவியர் தாரணி முதல் முயற்சியில் தேசிய அளவில், 23ம் இடம், தக்சிகா, 50ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். ஜீவா பள்ளி மாணவர்களின் சாதனைகள் தொடர, பள்ளி தலைவர், தாளாளர், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை